இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட...
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ்சென் சென்ப்ரெக்னெர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட்பைசென்ஸேனிஸ் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை நேற்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பின்போது அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் உள்ள அரசியல் நிலைமை தொடர்பிலும் இரா. சம்பந்தன் எடுத்துரைத்தார்.
இச் சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டார்.
இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட தாமதங்களை சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.