இன்று மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளது விவாத பொருளாகியுள்ளது. ரஜினியும் கமலும...
இன்று மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளது விவாத பொருளாகியுள்ளது.
ரஜினியும் கமலும் வெளியே நட்புடன் இருப்பது போல் காட்டினாலும், உள்ளுக்குள் இவர்கள் எதிரும் புதிருமாகத்தான் இருப்பதாக பத்திரிக்கையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ரஜினி ரசிகர்களின் முந்தைய கூட்டங்களில் காணொளி காட்சி மூலமே ரஜினி அவர்களுடன் உரையாடினார், ஆனால் இன்று முதல் முறையாக ரஜினிகாந்த் நேரில் பேசினார்.
அப்போது பேசிய அவர், அரசியலில் மற்றவர்கள் எல்லோரும் வேகமாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று நிறைய பேர் விமர்சித்து வருகிறார்கள். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக இருப்போம் என்று தெரிவித்தார்.
கமல்ஹாசனை மனதில் வைத்து தான் இவ்வாறாக ரஜினி பேசியதாக ஊடங்களில் விவாதமாகியுள்ளது.
மேலும், காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்னைகளில் நடிகர் கமல் உடனுக்குடன் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார், ஆனால், ரஜினி மவுனமாகவே இருக்கிறார்.