லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்வில் தோட்டத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சட...
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்வில் தோட்டத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய சதீஸ்வரன் என்ற மாணவரே இன்றைய தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவனின் பெற்றோர் திட்டியதன் காரணத்தினால் குறித்த சிறுவன் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மாணவனின் சடலம் நுவரெலியா மாவட்ட நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.