கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் இதுவரை 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர்...
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் இதுவரை 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று மாலை காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனுடன், இனங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில், சமூகவலைத்தளங்கள் ஊடாக பிரசாரங்களை மேற்கொண்ட பாடசாலை மாணவர்கள் இருவர் குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.