புதுக்கோட்டை அருகே வாராப்பூர் அருள்மிகு பூர்ணகலாம்பிகை, புஷ்பகலாம்பிகை சமேத, பெரியஅய்யனார், பாலையடிகருப்பண்ண மற்றும் பரிகார சுவாமிகளுக்கு மா...
புதுக்கோட்டை அருகே வாராப்பூர் அருள்மிகு பூர்ணகலாம்பிகை, புஷ்பகலாம்பிகை சமேத, பெரியஅய்யனார், பாலையடிகருப்பண்ண மற்றும் பரிகார சுவாமிகளுக்கு மாசி மகத்திருவிழாவை முன்னிட்டு மனித ரத்தத்தில் இருந்து சோறு பிசைந்து வானத்தில் எறியும் விழா மிக கோலகலமாக நடந்தது.
நேற்று மதியம் 12 மணிக்கு கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த மூன்று சிறுவர்களுக்கு பழைய வழக்க முறைப்படி அருணாகயிரை அறுத்தனர்.
இதனையடுத்து, பரம்பரையாக உள்ள வழக்கப்படி ஒருவர் தொடையை கீறி அதிலிருந்து வந்த ரத்தத்தை அங்கு தயாராக இருந்த சோற்றில் (சாதம்) ஊற்றி பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்தனர்.
பின்னர், இந்த பில்லி சோற்றை காட்டு பகுதியில் வீசுவதற்காக 20-க்கும் மேற்பட்ட பூசாரிகள் ஓடி சென்று, பில்லி சோற்றை காட்டு பகுதியில் வானத்தில் மேல் நோக்கி வீசினார்கள்.
அப்படி வீசப்படும் அந்த பில்லி சோற்றில் ஒரு பருக்கையும் தரையில் விழாது என்பது ஐதீகம்.
இந்த பில்லி சோறு தயாரித்து சுவாமிகளுக்கு படைக்கும் வரை அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த வேஷ்டி கூடாரத்தில் உள்ளே அமர்ந்திருந்தார்.
இக்கோயிலுக்கு தேர் 30 லட்சத்தில் சீர் செய்யப்பட்டு இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.