ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜப்பான் சென்ற இலங்கை தூதுக்குழுவில் கலகொட அத்தே ஞானசார தேரர் இடம்பெறவில்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜப்பான் சென்ற இலங்கை தூதுக்குழுவில் கலகொட அத்தே ஞானசார தேரர் இடம்பெறவில்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடன் சென்ற தூதுக்குழுவில் ஞானசார தேரர் இடம்பெற்றதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை எனவும் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
ஞானசார தேரர், ஜனாதிபதி ஜப்பானுக்கு விஜயம் செய்யும் முன்னர் தனிப்பட்ட விஜயமாக ஜப்பான் சென்றிருந்ததாகவும் அங்குள்ள இலங்கை தூதரகம் ஒழுங்கு செய்திருந்த ஜனாதிபதிக்கும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பில் கலந்து கொண்ட பிக்குமாருடன் ஞானசார தேரரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பயன்படுத்தி ஜனாதிபதியுடன் சென்ற தூதுக்குழுவில் ஞானசார தேரரும் இடம்பெற்றார் என்று சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.