முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள கட்சி தலைவர்கள் இன்று புதன்கிழமை முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள கட்சி தலைவர்கள் இன்று புதன்கிழமை முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.
நாட்டின் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த வாரம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்திருந்தாலும்,
நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் காரணமாக அந்த நடவடிக்கை தற்காலிகமாக நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பிலும், நாட்டின் வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தின் போது ஆராயப்படுமென்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது