பாகிஸ்தானில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், ஹிந்துக்கள் சிறுபான்மையினராகவும் வசிக்கின்றனர். நம் பாகிஸ்தானில், சிறுபான்மையினருக்கு பெரி...
பாகிஸ்தானில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், ஹிந்துக்கள் சிறுபான்மையினராகவும் வசிக்கின்றனர். நம் பாகிஸ்தானில், சிறுபான்மையினருக்கு பெரிய அங்கீகாரம் அளிக்கப்படுவது இல்லை.இந்நிலையில், பாகிஸ்தானின், சிந்து மாகாணத்தில், தார் மாவட்டம் உள்ளது. இங்குள்ள, நாகர்பார்கர்என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர், இந்து மதத்தைச் சேர்ந்த, கிருஷ்ண குமாரி கோஹ்லி,பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவரது தந்தை, விவசாயக் கூலியாக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு, 16 வயதில் திருமணம் நடந்தது.
அதன்பின் படித்து, 2013ல், சிந்து பல்கலைக்கழகத்தில், சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றார். பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, சமூகப் பணியாற்றி வந்த கிருஷ்ண குமாரி, பாக்கிஸ்தான் மக்கள் கட்சியில் இணைந்தார்.
பாக்கிஸ்தான் கின் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்க்வா, பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் உள்ள, 'செனட்' எனப்படும், மேல்சபை உறுப்பினர்கள், 52 பேரின் பதவிக்காலம், இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது இந்நிலையில் இந்த, 52 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.
இதில், பாக்கிஸ்தான்,கின் சிந்து மாகாணத்தில் இருந்து, கிருஷ்ண குமாரி கோஹ்லி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாக்கிஸ்தான்.,கில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இந்து பெண், 'செனட்' உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது, இதுவே முதன்முறை.