செவ்வாய் கிரகத்தில் விலங்குகள் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. செவ்வா...
செவ்வாய் கிரகத்தில் விலங்குகள் |
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது.
இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2ஆண்டுகளுக்கு முன்பு ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக அந்த விண்கலத்தில், ‘மாஸ்ட்கேம்’ என்ற கமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இந்த படங்களை ஆராயும் நிபுணர்கள் அடிக்கடி பல்வேறு விதமான யூகங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு படத்தில் விலங்குகளின் தொடை எலும்புகள் கீழே கிடப்பது போன்று தோன்றுகிறது. படத்தைப் பார்த்த நிபுணர்கள் டைனோசர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து மறைந்து விட்டன. டைனோசருக்கும் முன்பே,செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் வாழ்ந்து இருக்கலாம் என்று வேற்றுகிரகவாசிகள் பற்றி ஆராயும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
செவ்வாய் கிரகத்தில் விலங்குகள் |
இது குறித்து சதி கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கூறும் போது, இது செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதராமாகும். இது செவ்வாய் கிரகத்தில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க்கும் ஒரு நம்பிக்கையாகும் என்று நான் நம்புகிறேன். என கூறினார்