மாரவில தெமடபிடிய, தம்மிகாகம பிரதேசத்தில் உள்ள சதுப்பு நில பகுதியில் நடத்தி சென்ற பெரிய அளவிலான கசிப்பு தயாரிக்கும் இடத்தை பொலிஸார் முற்று...
மாரவில தெமடபிடிய, தம்மிகாகம பிரதேசத்தில் உள்ள சதுப்பு நில பகுதியில் நடத்தி சென்ற பெரிய அளவிலான கசிப்பு தயாரிக்கும் இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
அப்பிரதேசமானது யாருக்கும் இலகுவில் நெருங்க முடியாத வகையில் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டிருந்தது.
பொலிஸ் அதிகாரிகள் தங்களது சீருடைகளை அகற்றி குறித்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அந்த இடத்தில் இருந்து சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட கசிப்பு யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தின் பல பகுதிகளுக்கும், அநுராதபுரம், கண்டி உட்பட நாட்டின் பல பிரதேசங்களுக்கு விநியோகிப்பதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பில் 60 கசிப்பு போத்தல்கள் உட்பட கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.