தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகமே முழுவதும் மெகா ஹிட்டாகி வசூல் சாதனை படைத்தது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள...
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகமே முழுவதும் மெகா ஹிட்டாகி வசூல் சாதனை படைத்தது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் மெர்சல் லாபம் என கூறியது.
இருப்பினும் இன்னும் சிலர் மெர்சல் நஷ்டம் தான். விநியோகிஸ்தர்களுக்கு லாபம் தான் ஆனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் எனவும் சிலர் கூறி வந்தனர்.
இந்நிலையில் தற்போது மெர்சல் பட்ஜெட்டால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் அடைந்திருக்கலாம் என மெர்சல் படத்தை வாங்கிய விநோயோகிஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சில தினங்களுக்கு முன்பு மெர்சல் விநியோகிதர்களுக்கு மூன்று மடங்கு லாபம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.