வேலூர் மாவட்டத்தில் பொறியியலாளர் ஒருவர் சேண்பாக்கம் ரயில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள...
வேலூர் மாவட்டத்தில் பொறியியலாளர் ஒருவர் சேண்பாக்கம் ரயில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொறியியல் பட்டதாரியான நவீன் குமாருக்கு இராணுவத்தில் இணைய வேண்டும் என்பது ஆசை, இதனால் ராணுவத்தில் சேருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளார்.
தினமும் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். மேலும், குடும்ப சூழ்நிலை காரணமாக உணவகம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றவர், சில மாதங்கள் கழித்து அந்த வேலையையும் விட்டுள்ளார்.
இந்த நிலையில் நவீன்குமார் நேற்று காலை வழக்கம்போல் உடற்பயிற்சி செய்ய வீட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்டார்.
சிறிதுநேரத்தில் அவர் சேண்பாக்கம் மேம்பாலத்தின் அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
ஆனால் பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் நவீன்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது, நவீனின் இறப்பு செய்தி குறித்து அறிந்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமார் ராணுவத்தில் சேர முடியாததால் விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.