மாமனிதர் சிவராம் எதை நேசித்தாரோ அந்தப் பாதை எங்களுக்கானது -- சிரேஸ்ட ஊடகவியலாளர் தயாபரன் தெரிவிப்பு மாமனிதர் சிவராம் எந்த மையத்தை நோக...
மாமனிதர் சிவராம் எதை நேசித்தாரோ அந்தப் பாதை எங்களுக்கானது -- சிரேஸ்ட ஊடகவியலாளர் தயாபரன் தெரிவிப்பு
மட்டக்களப்பு ஆயர் இல்ல மண்டபத்தில் இடம்பெற்ற 13 ஆவது வருட நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தயாபரன் மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது
சிவராமின் சிந்தனைகள் தமிழ்த் தேசியம் சார்ந்த அவரது செயற்பாடுகள் தான் அவருக்கு மாமனிதர் என்ற உயரிய பட்டத்தைக் கொடுத்தது. இவருக்கு வழங்கப்பட்ட மாமனிதர் என்ற பட்டத்தை நீக்குவது என்பது அவரை நட்டாற்றில் தள்ளுவது போன்றது.
.சிவராம் எந்த மையத்தை நோக்கி எந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை நேசித்தாரோ அந்தப் பாதை எங்களுக்கானது.. சிவராம் பல ஊடகவியலாளர்களை உருவாக்கியிருக்கிறார். வடக்கு கிழக்கு மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் பல ஊடகவியலாளர்களை உருவாக்கியிருக்கிறார். சிவராமை எவர் கொலை செய்தாரோ அவரிடம் இருந்து பணத்தை வாங்கி சிவராம் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்கிறார்கள். சிவராமின் அஞ்சலி நிகழ்வு ஒரு சடங்கல்ல சிவராம் எந்த சிந்தனையை உருவாக்கினார். அந்த சிந்தனையை நடைமுறைப்படுத்துவதே அவருக்கு நாங்கள் செய்யும் நினைவாகும்.