முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் க...
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் 400ஆவது நாளாக இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் இரவு உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் கத்தியுடன் நுழைந்த நபர் ஒருவர் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவர்களை தாக்க முற்பட்டு உள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து தப்பித்து உறவுகள் கூடாரத்தை விட்டு வெளியேறிய வேளை , அந்நபர் அங்கிருந்த கதிரையினை கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர். பின்னர் அங்கிருந்த சமையல் பத்திரங்களையும் சேதப்படுத்தி உறவுகளால் " இன்று 400 ஆவது நாள் " என எழுதி தொங்க விடப்பட்ட பதாகையையும் சேதப்படுத்தி உள்ளார்.
அந்நிலையில் அவ்விடத்தில் மக்கள் கூடி தாக்குதலளியை பிடிக்க முயன்ற வேளை அவ்விடத்தில் இருந்து தாக்குதலாளி தப்பி ஓட முயன்றுள்ளார். இருந்த போதிலும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பொலிசாரின் உதவியுடன் தாக்குதலாளி கைது செய்யப்பட்டார்.