கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில் அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போது 17 முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கல்லாறு - சுண...
கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில் அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போது 17 முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கல்லாறு - சுணடிக்குளம் வீதியில் வைத்து அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கை நேற்று இரவு இடம்பெற்றுள்ளது
அத்துடன் சம்பவம் இடம்பெற்ற போது வாகனத்தின் சாரதியும், வாகனத்திலிருந்த நபரொருவரும் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்தே, பல இலட்சம் ரூபா பெறுமதியான 17 முதிரை மரக்குற்றிகள் மற்றும் வாகனம் என்பவற்றை அதிரடிப்படையினர் கைப்பற்றி தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் தப்பியோடியவர்களை கைது செய்யும் நடவடிக்கையும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.