சட்டத்தரணிகள் அனைவரும் வாள்வெட்டுக் குழுக்களின் வழக்குகளில் முன்னிலையாகமாட்டோம் என தீர்மானித்தால், வாள்வெட்டுக் குழுக்கள் சிறைச்சாலைகளில் ...
சட்டத்தரணிகள் அனைவரும் வாள்வெட்டுக் குழுக்களின் வழக்குகளில் முன்னிலையாகமாட்டோம் என தீர்மானித்தால், வாள்வெட்டுக் குழுக்கள் சிறைச்சாலைகளில் இருந்து வெளியே வர முடியாது. என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.
யாழ்.காலைக்கதிர் பத்திரிகை விநியோகஸ்தர் செ.இராஜேந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று (30) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
வாள்வெட்டுக் குழுக்களுக்காக சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாகாது புறக்கணிக்க வேண்டும். சட்டத்தரணிகள் அனைவரும் வாள்வெட்டுக் குழுக்களின் வழக்குகளில் முன்னிலையாகமாட்டோம் என தீர்மானித்தால், வாள்வெட்டுக் குழுக்கள் சிறைச்சாலைகளில் இருந்து வெளியே வர முடியாது. என்றார்.