தனியாருக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வக...
தனியாருக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தனர்.
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள தனியார் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இராணுவ அதிகாரிகளுடன் பேச்சு நடத்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இராணுவ முகாமுக்குள் சென்றிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த முகாமுக்கு பொறுப்பாக இருந்த இரண்டாம் நிலை அதிகாரியும் கலந்துரையாடும் காட்சியினை அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்தனர் . அதன் போது இராணுவத்தினர் அங்கிருந்த ஊடகவியலாளர்களை தமது கையடக்க தொலைபேசிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துள்ளனர்.