மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பீனிக்ஸ் பறவையின் வடிவில் நினைவு மண்டபம் அமையவுள்ளது. ஜெயலலிதாவின் சமாதி மெரினா கடற்கர...
மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பீனிக்ஸ் பறவையின் வடிவில் நினைவு மண்டபம் அமையவுள்ளது.
ஜெயலலிதாவின் சமாதி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி ரூ 50 கோடியே 80 லட்சம் செலவில் நினைவிடம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று காலை 9 மணியளவில் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினர்.
இதோடு அங்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார்கள்.
இதில் அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.