தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று ப...
தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10 மணிக்கு இப் போராட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் தமிழகத்தின் தூத்துக்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களது படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது தமிழ் நாட்டு அரசே நீதி கேட்ட மக்களுக்கு துப்பாக்கி குண்டுகளா..?, மோடி எடப்பாடி அரசே தூத்துக்குடி கொலையாளிகளுக்கு தண்டனை என்ன..? தூத்துக்குடிக்கு நியாயம் வழங்கு..? மோடியின் கையில் மக்களின் குருதி, மோடி எடப்பாடி ஆட்சியாளர்களே கொலையாளிகளுக்கு தண்டணை என்ன உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.