இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை அணி கிண்ணத்தைக் க...
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை அணி கிண்ணத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த தொடருக்காக கோஹ்லி 17 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூரு அணியும், டோனியை சென்னை அணி 15 கோடி ரூபாய் கொடுத்தும் தக்க வைத்து கொண்டது.
ஐபிஎல் தொடரில் இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்பு வந்தாலும், சென்னை அணிக்கு தலைவராக டோனி தான் இருப்பார் என்றும் அவர் தான் சென்னை அணியை வழிநடத்துவார் என்றும் சென்னை அணியின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
அதே போன்று டோனியையும் தக்க வைத்துக் கொண்டது.
கோஹ்லி(பெங்களூரு)
இந்நிலையில் பெங்களூரு அணிக்காக 17 கோடிக்கு வாங்கப்பட்ட கோஹ்லி, இந்தாண்டு 530 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் பெங்களூரு அணி அவருக்கு ஒரு ஓட்டம் அடிக்க 3.20 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளது.
டோனி
இந்த வருடம் சென்னை அணிக்காக விளையாடிய டோனியின் ஆட்டத்தில் பழைய ஆட்டத்தை பார்க்க முடிந்தது. ஒரு சில போட்டிகளை அற்புதமாக முடித்து கொடுத்தார்.
15 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் 15 ஆட்டங்களில் பின் வரிசையில் இறங்கி 455 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதனால் இவருக்கு சென்னை அணி ஒரு ஓட்டம் எடுக்க 3.29 லட்சம் கொடுத்துள்ளது.