வடமாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதோடு மறுபக்கம் ப...
வடமாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதோடு மறுபக்கம் பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக ரவிகரன் கருத்துத் தெரிவிக்கும் போது
வடமாகாணத்தில் போருக்கு பின்னரான 10 வருடங்களில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 67 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்குள்ளாக்கப்படுவது அம்பலமாகிறது.
வடமாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர். மறுபக்கம் பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக வடமாகாணத்தில் 131 விகாரைகள் போருக்கு பின்னரான 9 வருடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதன்படி யாழ். மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதன் ஊடாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் போருக்கு பின்னர் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களுடைய நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியேற்றப்படுவது மட்டுமல்லாது. தி ட்டமிட்ட வகையில் பௌத்தர்களே வாழாத பகுதியில் பௌத்த விகாரைகளும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இது குறித்து தமிழ்த் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து மக்களே பல இடங்களில் எமக்கு கூறியுள்ளார்கள். இனிமேலாவது வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதுடன் பௌத்தமயமாக்கலையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என மேலும் தெரிவித்தார்.