வாஸாகுடூச்யாதி கஷாயம் மற்றும் திராஷாதி கஷாயம் ஆகியவை 7.5 மி.லி வீதம் எடுத்து 60 மி.லி கொதித்து அடங்கிய தண்ணீரில் கலந்து காலை, மாலை, வெறும்...
வாஸாகுடூச்யாதி கஷாயம் மற்றும் திராஷாதி கஷாயம் ஆகியவை 7.5 மி.லி வீதம் எடுத்து 60 மி.லி கொதித்து அடங்கிய தண்ணீரில் கலந்து காலை, மாலை, வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
மலச்சிக்கல், வயிற்றில் எரிச்சல் இல்லாதிருக்க அவிபத்திரகர சூர்ணம், 2.5 கிராம் அளவில் எடுத்து இளநீர் அல்லது பாலுடன் கலந்து காலை, மாலை, இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாகச் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக விதார்யாதி கிருதம் 2.5 மி.லி எடுத்து அரிசி எடை சங்குபஸ்பம் குழைத்துச் சாப்பிடவும். தனி நெல்லிக்காய் சூர்ணம் 5 கிராம் 3 வேளை உணவு சாப்பிட்டவுடன் சுத்தமான தண்ணீருடன் சாப்பிடவும்.