தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இனிவரும் காலங்களில் கைகோர்க்கும் எண்ணம் கூட அடியோடு இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் திட...
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இனிவரும் காலங்களில் கைகோர்க்கும் எண்ணம் கூட அடியோடு இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
யாழ்.பலாலி வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை புதிதாக திறந்து வைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் நிர்வாக காரியாலையத்தில் நடைபெற்ற பேரவை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்படி விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
முதலமைச்சர் அங்கு உரையாற்றுகையில்:- வடக்க மாகாண சபையின் ஆட்சிக் காலம் முடிவடைந்த பின்னர் என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது தொடர்பில் நான்கு மாற்று வழிகள் உள்ளன.
திரும்பி எனது வீட்டிற்குச் சென்று எனது ஓய்வு வாழ்க்கையை தொடருவது, அல்லது ஒரு கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர் கொள்வது, அல்லது புதிய கட்சி ஒன்றை தொடங்குவது, அல்லது கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்திடம் தீர்வென்றை முன்வைத்து அதனை பெற முயட்சிப்பதாகும் என்றார்.