முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு முன்பாக அநாகரிகமாக நடந்து கொண்ட கோப்பரல் தர இராணுவ சிப்பாயை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்...
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு முன்பாக அநாகரிகமாக நடந்து கொண்ட கோப்பரல் தர இராணுவ சிப்பாயை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான், மற்றைய இராணுவ வீரரை பிணையில் செல்ல அனுமதித்தார்.
முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பாடசாலை மாணவிகளுக்கு அப்பகுதியால் சென்ற 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இரு இராணுவ சிப்பாய்கள் தமது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளனர்.
அதனை அங்கிருந்த சிலர் அவதானித்து இரு இராணுவ சிப்பாய்களையும் மடக்கி பிடித்து முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் குறித்த இரு இராணுவ சிப்பாய்க்களையும் , முல்லைத்தீவு நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினர்.
அதனை அடுத்து வழக்கினை விசாரணை நடத்திய நீதிவான் கேப்பரல் தர இராணுவ சிப்பாயை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் , மற்றைய சிப்பாயை ஒரு இலட்சம் ரூபாய் ஆள் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.