யாழில். ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்.விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். ...
யாழில். ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்.விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்டையில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபரை மல்லாகம் உடுவில் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரின் உடமையில் இருந்து ஹெரோயின் போதை பொருள் பொதிகளையும் மீட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரையும் , அவரிடம் இருந்து மீட்கபட்ட போதை பொருளையும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.