பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கான உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவினால் பிரதமர் பதவிக்கோ அல...
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கான உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவினால் பிரதமர் பதவிக்கோ அல்லது அமைச்சரவைக்கோ எந்தவித பாதிப்புமில்லை என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று இரவு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா உரையாற்றினார்.
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஆனால் பொதுத் தேர்தல் நடைபெறுவதை தடுப்பதற்பாக அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான தீர்ப்பு வழங்கப்படவில்லை.மனுக்களை தாக்கல் செய்தவர்களும் எதிர்தரப்பினரும் வாதங்களையும் சமர்ப்பனங்பளையும் முன்வைக்க வேண்டும். இதற்கே நீதிமன்றம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது என்று தெரிவித்த அமைச்சர், தற்போதுள்ள மூன்று பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாமின் எண்ணிக்கையை ஒன்பதாக அதிகரிப்பதற்கான கோரிக்கையையும் நாம் முன்வைக்க உத்தேசித்துள்ளோம் என்றும் கூறினார்.