ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் செய்சா உட்பட நான்கு பேர் ...
ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் செய்சா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16ம் திகதி கொடகவெல பிரதேசத்தில் வைத்து ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக ரஞ்சித் செய்சா உட்பட நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
அதன்படி அவர்கள் இன்று காலை கொடகவெல பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களை ஜனவரி மாதம் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.