ஜனாதிபதியின் பாதுகாப்பாக சென்ற இராணுவ கொமாண்டோ பிாிவின் வாகனம் விபத்துக்குள்ளான சம் பவத்தில் இருவா் உயிாிழந்துள்ளதுடன் மேலும் பலா் படுகாயமட...
ஜனாதிபதியின் பாதுகாப்பாக சென்ற இராணுவ கொமாண்டோ பிாிவின் வாகனம் விபத்துக்குள்ளான சம் பவத்தில் இருவா் உயிாிழந்துள்ளதுடன் மேலும் பலா் படுகாயமடைந்துள்ளனா்.
முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று வருகை தந்திருந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கோமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு
செய்து வவுனியா பகுதி நோக்கி வருகைதந்தவேளை இவ் விபத்தில் சிக்கியுள்ளது. தட்டாலை பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்காகியுள்ளதுடன்
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
எனினும் விபத்தில் காயம்மடைந்தவர்களில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.