-எஸ்.நிதர்ஷன்- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதான பிராந்திய மகாநாடு அடுத...
-எஸ்.நிதர்ஷன்-
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதான பிராந்திய மகாநாடு அடுத்தமாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் கலாபூசணம் க.அருந்தவராசா தலைமையில் நடைபெறவுள்ள இவ் மகாநாட்டில் விசேட விருந்தினராக வடக்கு மாகாண மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளார்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச் சந்திரன், அக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், கட்சியின் உப தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம், கட்சியின் பொருளாரும் மன்னார் நகர சபையின் உறுப்பினருமான சம்பூரணம் இரட்ணசிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாநாட்டில் வரவேற்புரையை கட்சியின் வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் இராசதுரை கோமதியும், தலைமையுரையை கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் க.அருந்தவராசாவும், பிராந்திய அறிக்கையை கட்சியின் உப செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான கலாநிதி சர்வவேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்வில் அதீதிகள் உரையை முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபையின் நகரபிதா ந.அனந்தராஐ;, கட்சியின் வடமராட்சி இணைப்பாளர் மருத்துவர் சிங்கவாகு சிவக்குமார், கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் குஞ்சித்தம்பி தினேஷ், வலிதெற்கு இணைப்பாளர் குழந்தைவேலு சிறீரங்கன், வலி வடக்கு இணைப்பாளர் மயில்வாகனம் சிவகுமாரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.



