கிளிநொச்சி – பளை, புதுக்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்றுடன் இராணுவ ட்ரக் வண்டி மோதி இ...
கிளிநொச்சி – பளை, புதுக்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றுடன் இராணுவ ட்ரக் வண்டி மோதி இன்று மாலை 5.30 அளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மற்றுமொரு சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பளை – புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
பளை பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.