முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் முதலிரு இடங்களையும் பெற்ற உயிரியல் பிரிவு மாணவர்களை, முன்னாள் வடமாகாணசபை உறுப்ப...

முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் முதலிரு இடங்களையும் பெற்ற உயிரியல் பிரிவு மாணவர்களை, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் நேரில் சென்று சந்தித்து பாராட்டியுள்ளார்.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவர்களான உயிரியல் பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவி வேலும்மயிலும் - விதுர்சிகா மற்றும் இரண்டாம் நிலை பெற்ற மாணவன் தர்மகுலசிங்கம் - அபிசாந் ஆகியோரையே ரவிகரன்
இவ்வாறு நேரில் சென்று சந்தித்து, தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்புக்களில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேசுவரன் அவர்கள் உடன் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






