யாழ்.குடாநாட்டுக்கான குடிநீா் தேவையை பூா்த்திய செய்ய பல தடங்கல்கள், இடையூறுகள் வரும் நிலையி ல் எந்த தடையோ, இடையூறோ இல்லாத ”பாலியாறு” திட்டத...
யாழ்.குடாநாட்டுக்கான குடிநீா் தேவையை பூா்த்திய செய்ய பல தடங்கல்கள், இடையூறுகள் வரும் நிலையி ல் எந்த தடையோ, இடையூறோ இல்லாத ”பாலியாறு” திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுங்கள் என வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் ஆளுநா் சுரேன் ராகவனுக்கு எழுத்துமூல கடிதம் ஒ ன்றினை அனுப்பியுள்ளாா்.
கடந்த 22ம் திகதி ஆளுநருக்கு எழுதியுள்ள மேற்படி விடயம் தொடர்பாக கடிதத்தில் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேலும் கூறியுள்ளதாவது, யாழ்.குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. கடந்த 6 தசாப்தங்களுக்கு மேலாகவே இது ஒரு பேசு பொருளாக இருந்த வந்தாலும் யாழ்.குடாநாட்டின் நீர்த்தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.
எனினும் கடந்த 2005ம், 2006ம் ஆண்டுகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்ட யாழ்ப் பாணம், கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டம் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடைய ஆட்சேபனைகளினால் தடைப்பட்டு நிற்கிறது. இந்நிலையில் கடந்த 26.02.2018ம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில்
நடைபெற்ற கலந்துரையாடலில் வருடம் பூராகவும் கடலுக்கு சென்று கொண்டிருக்கும் நீரை தடுத்து ஒரு நீர் நிலையை உருவாக்குவதன் ஊடாக எந்த எதிர்ப்புக்கள், அல்லது தடைகளும் இல்லாமல் குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு நீர் தேவையை பூர்த்தி செய்யலாம். என்ற கருத்து எம்மால் முன்வைக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கமைய வேண்டிய பூர்வாக ஆய்வுகள் பிரதம செயலர் மற்றும் பிரதி பிரதம செயலர் (பொறியியல்சேவைகள்) ஆகியோரின் வழிகாட்டலில் மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்டது. இவை தொடர்பான அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமை யிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல்,
இத் திட்டத்தின் மேல் நடவடிக்கைகளுக்கான சாத்தியகூற்று ஆய்வுக்கு தேவையான நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்து மேல் நடவடிக்கை தொடர்ந்து வருகின்றது. மேலும் இத்திட்டம் தொடர்பான பிரேரணை 04.10.2018ம் திகதி நடைபெற்ற வடமாகாண சபையின் 133வது அமர்விலும் எம்மால் முன்வைக்கப்பட்டு
அப்போதைய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் வழிமொழியப்பட்டு சபையில் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டம் சம்மந்தமான மற்றயப ல விடயங்களும் 133வது அமர்வில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் வடமாகாணசபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு குடிநீர் விநியோகத்தி ட்டமும் இதுவேயாகும்.
ஏனவே இந்த திட்டத்தை துரிதகதியில் முன்னகர்த்தி பூர்த்தியாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என அவர் கேட்டுள்ளார்.