குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருகின்றனர் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவி...
குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருகின்றனர் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் ,
கோப்பாய் பொலிஸார் வீடுகளுக்கு சென்று ஒரு படிவத்தை வழங்கி குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சேகரித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
வடக்கில் அமைதியான நிலை காணப்படும் நிலையில் எதற்காக இவ்வாறு தகவல்களை பொலிஸார் சேகரிப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று கடந்த காலத்தில் வெள்ளவத்தை பகுதிகளிலும் வீடுகளில் உள்ளோரின் தகவல்களை பொலிஸார் சேகரித்த போது அதற்கு அமைச்சர் மனோகனேசன் எதிர்ப்பு தெரிவித்து , பொலிஸார் தகவல்களை சேகரிப்பதை நிறுத்த வேண்டும் என கோரியதை அடுத்து அது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது கோப்பாய் பொலிஸாரினால் தகவல்கள் கோரப்பட்டு வருகின்றது. தகவல்களை கோருவதற்கான காரணங்களை பொலிஸ் உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். அதனூடாகவே மக்கள் மத்தியில் தற்போதுள்ள அச்ச நிலைமையை போக்க முடியும் என தெரிவித்தார்.