மிதுன ராசி - ஆண்டு பலன் - 2019

மிதுன ராசி - ஆண்டு பலன் - 2019

மிதுன ராசிக்கு வருட முற்பாதியில் சில மாற்றங்களைத் தந்து பிற்பகுதியில் நன்மைகளைச் செய்யும் வருடமாக 2019-ம் ஆண்டு அமையும். தற்போது சாதகமற்ற...

மிதுன ராசிக்கு வருட முற்பாதியில் சில மாற்றங்களைத் தந்து பிற்பகுதியில் நன்மைகளைச் செய்யும் வருடமாக 2019-ம் ஆண்டு அமையும்.
தற்போது சாதகமற்ற ஆறாமிடத்தில் இருக்கும் குருபகவான் மார்ச் மாதத்தில் அதிசார முறையில் ஏழாமிடத்திற்கு மாறுவது ஒரு நல்ல அமைப்பு என்பதால் பிறக்கப்போகும் புது வருடம் உங்களுக்கு நல்ல வருடமாகத்தான் இருக்கும். எனவே இந்த ஆண்டு சாதகமற்ற அமைப்புகள் எதுவும் மிதுனத்திற்கு இல்லை.
குறிப்பாகச் சொல்லப் போனால் இதுவரை உங்களின் பணவரவுகளைத் தடுக்கும் இடமான இரண்டாமிடத்தில் இருக்கும் ராகுபகவான் மார்ச் மாதம் 6-ம்தேதி அங்கிருந்து மாறுவது தொழில் விஷயத்திற்கும், பணவரவிற்கும் நல்ல அமைப்பு. எனவே மிதுனத்திற்கு இந்த வருடம் நன்மைகளும், மேன்மைகளும் மட்டுமே இருக்கும் என்பது உறுதி.
ஒரு குறிப்பிட்ட பலனாக கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழாமிடத்தில் சனி இருப்பதால் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.
ஏழாமிடத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்க்கும் சனி உங்களை பிடிவாதக்காரர் ஆக்குவார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பணி புரியும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம். அது தேவையற்ற மனஸ்தாபங்களுக்கோ, வீண்விரோதத்திற்கோ வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.
வருடம் முழுவதும் விரைய ஸ்தானமான பனிரெண்டாமிடம் வலுப்பெறுவதால் பிறக்க இருக்கின்ற புத்தாண்டு சுப, விரயங்களையும் தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும். குறிப்பாக இந்த புத்தாண்டில் திருமணம், வீடு கட்டுதல், குழந்தைகளுக்கான சுபச் செலவுகள் போன்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும். இதுவரை மகன்-மகளுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்த முடியாதவர்கள் இப்போது நல்லவிதமாக அதனை நடத்தி முடிப்பீர்கள்.
இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் தகுந்த வருமானம் இன்றியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்றியும் பொருளாதார பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருந்த மிதுனத்தினர் அவை நீங்கி திருப்தியான வருமானங்களை பெறுவீர்கள். இந்த வருடம் சம்பாதிக்க இருக்கும் வருமானத்தை சேமிக்கத்தான் முடியாதே தவிர தாராளமாக செலவு செய்வதற்கான வருமானம் இருக்கும்.
இந்த வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.
மேம்போக்காகப் பார்க்கையில் புத்தாண்டின் ஆரம்பத்தில் குருபகவான் சாதகமற்ற ஆறாம் வீட்டில் இருப்பது போல தோன்றினாலும் அவர் இந்தமுறை அதிசார அமைப்பில் பலவீனமாக இருப்பதால் கெடுதல்களைச் செய்ய மாட்டார். அதேநேரத்தில் இதன் பலனாக உங்களுக்கு தொழில் விஷயங்களில் அடிக்கடி தூர இடங்களுக்குப் பயணங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு வாய்ப்பு இப்போது கிடைக்கும். இன்னும் சிலருக்கு வெளிமாநில வாய்ப்புகளும், வடக்கு நோக்கிய விஷயங்களும் இருக்கும்.
இளைய பருவத்தினர் சிலருக்கு இதுவரை அமையாத திருமணம், புத்திரபாக்கியம், நிரந்தர வேலை, தொழில் பாக்கியங்கள் இந்த வருடம் கிடைக்கும். மிக உன்னத பலனாக சொல்லப்போனால் ஒரு பத்து வயது குறைந்தது போன்ற உடல்திறனையும், புத்துணர்ச்சியையும் இந்தப் புதுவருடம் கொடுக்கும் என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக முப்பது வயதுக்களில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் நல்லபடியாக அமைந்து இந்த வருடத்திலிருந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும். இனிமேல் பணத்தட்டுப்பாடு என்பது உங்களுக்கு இருக்காது.
திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.
தொழில் செய்பவர்கள் இப்போது அகலக்கால் வைக்க வேண்டாம். தொழிலை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டிய வருடம் இது. தொழில் விஷயங்களில் யாரையும் நம்பாதீர்கள். குறிப்பாக தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். இனிமேல் கற்றுக்கொண்டு செய்ய வேண்டிய தொழில் இப்போது கை கொடுக்காது.
பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி மாற்றலாகி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் வீட்டில் பிரச்னை எதுவும் இருக்காது. எல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு சலிப்பு வரும் என்பதால் யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
சிலர் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் வேலையில் பாராட்டப் படுவீர்கள். மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும்.
அரசு ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப்பளுவும் இனிமேல் நீங்கி உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.
வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இனிமேல் முயற்சி பலிதமாகும்.
அரசு ஊழியர்களுக்கு இந்தப் புத்தாண்டால் நல்ல நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.
நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும்.
சுருக்கமாக சொல்லப்போனால் இந்த வருடம் கிடைக்கும் மாற்றங்களைக் கொண்டும், மற்ற அனுபவங்களைக் கொண்டும் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் முன்னேற்றமானதாக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் எதிர்வரும் புத்தாண்டை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,269,doctor,13,Gallery,131,india,430,Jaffna,3852,lanka,9416,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4618,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: மிதுன ராசி - ஆண்டு பலன் - 2019
மிதுன ராசி - ஆண்டு பலன் - 2019
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv8N7jXb_xPrWrOK3JcolyYH6CJZMtN0L2Mjyl0qO_9ask2sr0sj7DoJS2lNMWQxQwRW3AxTIQI1AFx-y_SyrheDBXce0fb6H6lMzI4uYhtyoXA4q9lfse89WpXRI0HGkbo9PbGSEKd5I/s400/%25E0%25AE%2586%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581+%25E0%25AE%25AA%25E0%25AE%25B2%25E0%25AE%25A9%25E0%25AF%258D+-+2019.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv8N7jXb_xPrWrOK3JcolyYH6CJZMtN0L2Mjyl0qO_9ask2sr0sj7DoJS2lNMWQxQwRW3AxTIQI1AFx-y_SyrheDBXce0fb6H6lMzI4uYhtyoXA4q9lfse89WpXRI0HGkbo9PbGSEKd5I/s72-c/%25E0%25AE%2586%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581+%25E0%25AE%25AA%25E0%25AE%25B2%25E0%25AE%25A9%25E0%25AF%258D+-+2019.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/02/2019_10.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/02/2019_10.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content