டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள அங்கொட லொக்காவின் சகா ஒருவர், வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதாள கோஷ்டி உறு...
டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள அங்கொட லொக்காவின் சகா ஒருவர், வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதாள கோஷ்டி உறுப்பினர்களையும், சட்டவிரோத போதைக்கடத்தல் கும்பலையும் கைதுசெய்வதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இறங்கியுள்ளனர்.

கடந்த 7 நாட்களில் மாத்திரம் 8 இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பல இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையிலேயே இன்று அங்கொட லொக்காவின் சகா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து 40 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் , சந்தேகநபர் மிரிஹான சிறப்பு விசாரணைப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.