வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் மொழிக்கொள்கைக்கு எதிர்மாறாக அவரது மக்கள் தொடர்பு அதிகாரி செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளத...
வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் மொழிக்கொள்கைக்கு எதிர்மாறாக அவரது மக்கள் தொடர்பு அதிகாரி செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கடந்த ஜனவரி 9ஆம் திகதி யாழ்ப்பாண அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற கையுடன், வடக்கு மாகாண அரச நிறுவனங்களில் மும்மொழிக்கொள்கை வரும் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் சீரமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அத்துடன், வடமாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் தலைமையில் ஐவரடங்கிய சிறப்புக் குழுவொன்றையும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்தார்.
இந்த நிலையில் ஆளுநரின் கொள்கைக்கும் அவரது நடவடிக்கைகளுக்கும் எதிர்மாறாக அவரது மக்கள் தொடர்பு  அதிகாரி தனது வாகனத்தில் சிங்கள மொழியில் மட்டும் எழுதிய அறிவித்தல் பலகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார்.
மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரியின் இந்தச் செயற்பாட்டை நெற்றிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரியின் இந்தச் செயற்பாட்டை நெற்றிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
							    
							    
							    
							    
