,-எஸ்.நிதர்ஷன்- 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்படவேண்டிய ஐ றோட் செயற்றிட்டம் 3 வருடங்களாக தொடக்கப்படாத நிலையில், ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகை...
,-எஸ்.நிதர்ஷன்-
2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்படவேண்டிய ஐ றோட் செயற்றிட்டம் 3 வருடங்களாக தொடக்கப்படாத நிலையில், ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்தாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த வருடம் மே மாதம் ஐ றோட் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த ஆராய்வு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது வீதி அபிவிருத்தி சம்மந்தமான விடயம் பேசப்படுகையில், ஐ றோட் செயற்றிட்டம் எதற்காக ஆரம்பிக்கப்படாமல் உள்ளது? என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன்,சி.சிறீதரன் மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரி, இந்த வருடம் ஆரம்பமாகும் என கூறியிருந்தார்.
அப்போது இந்த வருடம் என்றால் இந்த வருடத்தில் எப்போது ஆரம்பமாகும்? எந்த மாதத்தில் ஆரம்பமாகும்? என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேள்வி எழுப்பினார். தோடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஐ றோட் செயற்றிட்டம் என்பது வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது. என கூறினார். இதனையடுத்து சபையிலிருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியுடன் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதற்காக ஐ றோட் செயற்றிட்டம் ஆரம்பமாவதற்கு காலதாமதமாகின்றது? என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து இந்த வருடம் மே மாதமளவில் ஐ றோட் செயற்றிட்டம் ஆரம்பமாகும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்..