ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு மூன்று நாள் விஜயமாக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். ...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு மூன்று நாள் விஜயமாக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
பிரதமரின் இந்த வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது. அதிலும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறும் இடங்களில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினர் கடும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கிற்கும் மூன்று நாள் விஜயமாக இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தருகின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த மூன்று நாட்களும் யாழில் தங்கியிருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளார்.
இதற்கமைய இன்று யாழ் வருகின்ற பிரதமர் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளர்.பிரதமரின் இந்த விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகள் எங்கும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெறும் இடங்களிலும் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டு கடும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக யாழில் பிரதமர் முதலாவதாக கலந்து கொள்ளும் நிகழ்வாக கோப்பாய் பிரதேச செயலக கட்ட திறப்பு விழா இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வு நடைபெறும் இடங்களையும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கடும் சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோன்று நிகழ்வு நடைபெறும் இடத்தில் கட்டப்பட்டுள்ள வாழைக்குழை முதல் கும்பங்கள் மற்றும் பிரதமருக்கு போர்க்கவுள்ள பொன்னாடைகள் முதற்கொண்டு வரவேற்கும் சிவப்பு கம்பங்கள் அனைத்தும் கடும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு எதனையுமே விட்டு வைக்காது கடுமையான அங்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.