மறப்போம் மன்னிப்போம் - வன்மையாக கண்டிக்கிறது தமிழ் மக்கள் கூட்டணி

மறப்போம் மன்னிப்போம் - வன்மையாக கண்டிக்கிறது தமிழ் மக்கள் கூட்டணி

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சியில் வைத்து மறப்போம் மன்னிப்போம் என்று கூறிவிட்டு போன விடயம் ஒரு சாதாரண விடய...

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சியில் வைத்து மறப்போம் மன்னிப்போம் என்று கூறிவிட்டு போன விடயம் ஒரு சாதாரண விடயமல்ல.  அவருடைய அந்தக் கருத்தை தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அதுவும் இனப்படுகொலை செய்யப்பட்ட கிளிநொச்சி மண்ணில் வைத்து சொல்லியிருப்பதை தமிழ் மக்கள் கூட்டணி மிக வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் ஊடக பேச்சாளருமான க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவிலில் உள்ள அவரது இல்லத்தில் 20 நேற்று மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

யுத்தக் குற்றத்தை மறப்போம் மன்னிப்போம் என பிரதமர் கூறியிருக்கின்றார்.  பிரதமரின் இந்த கருத்து ஏற்று கொள்ள முடியாது. அதனை நாங்கள் கண்டிக்குன்றோம். அதே நேரத்தில் பிரதமர் உரையாற்றிய  அந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆனால் அங்கு வைத்து அதற்கு மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும் அல்லது உடனடியாகவே ஊடகங்களின் ஊடாக மறுப்பை வெளியிட்டுருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.  ஆகையினால் பிரதமரின் அந்த கருத்தில் அவர்களுக்கும் உடன்பாடு இருப்பதாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது.

ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் பிரதமரின் கருத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் வன்மையாக நாங்களும் கண்டிக்கிறோம். ஆகவே இங்கு இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கான நீதி நியாயம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
இதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்காமல் மறப்போம் மன்னிப்போம் என்று பிரதமர் கூறுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல
அத்துடன் சிவஞானம் சிறிதரன் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று ஒன்றில் இனப்படுகொலையை நிகழ்த்திய மஹிந்த ராஜபக்சவை இப்படத்தில் இருந்து வெளியேற்றவே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய தாங்கள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருகின்றதாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு கூறிக் கொண்டு கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசுக்கு ஆதரவை கூட்டமைப்பு வழங்கி வருகிறது. இதனுடாக இந்த  அரசாங்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதுகாத்து வருகின்றது. ஆனால் அரசாங்கம் தமிழ் மக்களுடைய கோரிக்ககைளை நிறைவேற்றவில்லை எனவும் அருந்தவபாலன் மேலும் தெரிவித்தார்.


/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,269,doctor,13,Gallery,131,india,430,Jaffna,3852,lanka,9414,medical,7,Medicial,39,sports,417,swiss,15,technology,84,Trending,4617,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: மறப்போம் மன்னிப்போம் - வன்மையாக கண்டிக்கிறது தமிழ் மக்கள் கூட்டணி
மறப்போம் மன்னிப்போம் - வன்மையாக கண்டிக்கிறது தமிழ் மக்கள் கூட்டணி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRzwmdXkHfvj1hNB3EDTltZ6EiEamSiBUG-1hABQTNlUOx3UdH3ENIzx0F6HjeoCjGQosANTSWIInT06Cvxti8VOx-gsB5qpniNm3DU_0aNv64T0yOHS0GslDTPV0CL9BiNwd94AoQwro/s640/%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRzwmdXkHfvj1hNB3EDTltZ6EiEamSiBUG-1hABQTNlUOx3UdH3ENIzx0F6HjeoCjGQosANTSWIInT06Cvxti8VOx-gsB5qpniNm3DU_0aNv64T0yOHS0GslDTPV0CL9BiNwd94AoQwro/s72-c/%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/02/blog-post_967.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/02/blog-post_967.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content