சிறப்புத் தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார். ஐ...
சிறப்புத் தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசின், ‘மங்கல’ வரவு – செலவுத் திட்டம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் இன்று (5) சமர்ப்பிக்கப்பட்டது. அதனை சமர்பித்து உரையாற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்ததாவது:
பல்கலைக்கழக மாணவர்களின் 50% க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், பெண் தொழிலாளர்கள் 30% க்கும் குறைவாகவே உள்ளனர். வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 3 மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
சிறுநீரக நோயாளர்களுக்காக ஆயிரத்து 800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சிறப்புத் தேவையுடையவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாவிலிருந்து 5 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கென 4 ஆயிரத்து 320 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் மறுவாழ்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதற்காக வீரவல மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய இடங்களில் புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படும்.