பொகவந்தலாவ குயினா மேற்பிரிவு தோட்டப்பகுதியில் 17 வயது சிறுமி தான் அணிந்திருந்த துப்பட்டாவினை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள...
பொகவந்தலாவ குயினா மேற்பிரிவு தோட்டப்பகுதியில் 17 வயது சிறுமி தான் அணிந்திருந்த துப்பட்டாவினை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று (25) காலை 9 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தனது வீட்டிலிருந்து பொகவந்தலாவ நகரப்பகுதிக்கு தொழில் நிமித்தம் செல்வதாக கூறி மீண்டும் வீடு திரும்பிய சிறுமி வீட்டில் எவரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது தாய் தன்னை ஏசியமையாலேயே தான் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்வதாக குறித்த சிறுமி கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
17 வயதுடைய பரமநாதன் நித்தியா எனும் சிறுமியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


