காலாவதியான ஜெனீவா அரங்கிற்கு இறுதிச் சடங்கைச் செய்வதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்டவர்கள் ஜெனீவா விற்குப் பயணம் செய்ய உள்ளத...
காலாவதியான ஜெனீவா அரங்கிற்கு இறுதிச் சடங்கைச் செய்வதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்டவர்கள் ஜெனீவா விற்குப் பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்திருக்கும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரீ. கணேசலிங்கம் இன்றைக்கு தமிழ்த் தலைமைகள் தங்கள் பணிகளைச் செய்யாமல் தவறவிடுவதால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாக வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவும் ஈழத் தமிழர்களின் மனிதவுரிமை நகர்வும் என்;ற தலைப்பிலான கருத்தமர்வு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதன் போது ஜெனீவா தீர்மான வருகையின் அரசியல் பின்னணி எனும் தலைப்பில் உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..
இன்றைய சூழலில் ஏன் இப்படியான சந்திப்புக்களும், வடக்கு கிழக்கில் ஏன் இவ்வாறான போராட்டங்கள் அவசியமென்பது முதலில் வலியுத்தப்பட வேண்டுமென்று நினைக்கின்றேன். தாராளவாத சக்திகளுக்கும் இலங்கை சக்திகளுக்கும் ஓர் இணைவு ஜெனீவா அரங்கை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறதென்பதை அல்லது கையாளுகிறதென்பது பற்றி பேசப்படுகிறது.
உண்மையில் தாராள அரசுகள் தங்களுக்குள்ளே இருக்கின்ற ஒரு புரிதலை நேர்கணிதமாகக் கொண்டு வருவதற்குத் தான் ஐனநாயகம் பற்றிய உரையாடல்களை எங்களுக்கு முன்னே முதன்மைப்படுத்தியிருக்கின்றன. அதனுடைய விளைவுகளை தினந்தினம் நாங்கள் தரிசிக்க முடிகின்றது. அதிலும் எங்கள் தலைமைகள் பற்றிய விடயங்கள் எங்களுக்கு நல்லாகத் தெரியும்.
அரசியல் தலைமைகள் நாளை மறுதினமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் nஐனிவா செல்ல இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எதற்காகச் செல்கின்றனர் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் பயணமாவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். கலாவதியான ஜெனீவா அரங்கு என்று ஒரு கட்டுரையை நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களில் எழுதியிருந்தேன். அப்படி அது கலாவதியாகிவிட்ட நிலையில் அதற்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக அவர்கள் பயணம் செய்கின்றார்களென நினைக்கிறேன்.
இந்தக் காலத்தை நீடிப்பது என்பதன் வலிகள் சமூக இருப்பின் வலிகளாகவே காணப்படுகின்றது. மக்களின் அரசியல் தலைமைகள் தங்களுடைய பணிகளைச் செய்யாத சந்தர்ப்பங்களில் அந்தத் தலைமைகள் விட்டுச் சென்ற இடங்களை நிரப்ப வேண்டிய ஒரு பொறுப்பு தங்களுக்கு உரியதென மக்கள் கருதுகின்றனர். வடகிழக்கில் காணாமல் போனோர் நீண்ட போராட்டத்தைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதே போன்று காணி விடுவிப்பிற்காக கேப்பாப்பிலவு மக்களும் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவ்வாறு நிறைய விடயங்கள் தொடர்ச்சியான போராட்டங்களும் அதற்கான முனைப்புக்களும் தமிழர்கள் மத்தியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏங்களுடைய தேவை அல்லது இலக்கு நிறைவு பெறும் வரை இவற்றை தலைமைகள் கைவிட்டாலும்; அதனைத் தொடர வேண்டியதொரு நிர்ப்பந்தம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதைத் தவறுகின்ற பட்சத்தில் தங்களுடைய இருப்பின் நிலங்கள், மொழிகள், பண்பாட்டினுடைய அடிப்படைகள் காணாமல் போகும் என்பது வரலாற்றின் பதிவுகள்.
ஐயாயிரம் வருடங்களுக்கு மேல் பொராடிய புதர்கள் இதனைத் தான் நெறிப்படுத்தினர். ஊலகம் முழுவதும் அலைந்து திரிந்தும் தங்கள் இருப்பை பற்றி சிந்தித்தார்கள். அதற்குடாக வாழ்வியலும் மிள் உருவாக்ககமும் தயாராகக் கூடிய வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. மீள் உருவாக்கத்திற்கு கட்டியெழுப்புவதற்கு அந்த மக்களும் அவர்களின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து நீண்ட பயணத்தைச் செய்தார்கள். ஆனால் இன்று எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட தலைமைகளின் பலவீனங்கள் எங்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்த விடயங்கள் தான்.
ஆதனால் நாங்கள் மிளவும் அந்தத் தலைமைகளிடம் சில விடயங்களை எதிர்பார்க்க முடியாது. ஓவ்வொரு nஐனிவா அமர்வும் ஆரம்பமாகுமு; போதும் இந்த அரங்கில் நிறையப் பேர் கூடுவார்கள். மீளவும் அடுத்த ஜெனீவா வரும் போது கூடுவார்கள். ஆனால் இவை எதையும் இந்தத் தலைவர்கள் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
ஆனால் நிச்சமாக அவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்கள் கிடையாது என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். அவர்களுடைய தேசிய இலக்கு தேசிய அவா என்பது அவர்களுடைய நலன்சார்ந்த அவா மட்டுமே. உலக ஒழுங்குமுறைகளில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்ற இலங்கையோடு அமெரிக்கர்களின் உரையாடல் நடக்கின்றது.
ஜெனீவா அரங்கையும் அமெரிக்கர்கள் அவ்வாறு தான் பயன்படுத்தகின்றார்கள். இலங்கையில் ஒரு ஐனநாயக அரசு அல்லது தங்களுக்கு இசைவு பெற்ற அரசு வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடு ஆகும். அவ்வாறு அமெரிக்கா மட்டுமல்ல ஏனைய நாடுகள் சகலதையும் தங்களோடு இணைத்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையிலையே இலங்கை ஆட்சியாளர்களின் பயணம் முன்னெடுக்கப்படுகிறது.
ஏறக்குறைய பாதுகாப்புச் சபையின் உறுப்புரிமை நாடுகளை இலங்கை அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கொ அல்லது சலுகைகளுக்காக வைத்தக் கொள்ள முயற்சிக்கின்றது. ஆக இந்தச் சூழல் தான் nஐனிவா அரங்கின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. nஐனிவா அரசங்கு மிக போலியானது. உலக அரங்கு எல்லாமே மிக போலியான நியமங்களுக்குள்ளே தான் இயங்குகின்றதென்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் அவற்றைப் பயன்படுத்துகின்ற வல்லமை எங்களுடைய அரசியல் தலைமைகளிடத்தே இல்லாமல் அதனுடைய போலிகள் ஆழமான தாக்கத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. இந்த அரங்குகள் ஒன்றும் எந்தத் தேசமும், எந்த நாடும், எங்களுக்கான வாய்ப்புக்களைத் தரப்போவதில்லை என்பது தெளிவான புரிதல்.
ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களை எங்களால் பயன்படுத்த முடியவில்லை என்பது எங்களது மிக மோசமான அல்லது புத்திசாலித்தனமற்ற அல்லது அரசியல் இலக்கற்ற சமூக சமூகத்தின் பிரதிபலிப்புத்தான். இந்த தலைமைகளின் இருப்பில் ஒரு மாற்றம் சாத்தியமானால் மட்டுமே அல்லது புதிய அரசியல் தலைமைகள் ஏதாவது இதற்கான வாய்ப்பை தமிழினத்திற்கு தந்தால் மட்டுமே ஒரு சாத்தியமானது நடக்கலாம்.
ஏனென்றால் nஐனிவா அரங்கு தகவலைப் பரிமாற்றுகின்ற மையம். ஒரு செய்தியை கொண்டு செல்கின்ற மையம். நூன் நினைக்கின்றேன் சனல் 4 இல்லாமல் விட்டால் எங்கள் சிதைவுகள் அழிவுகள் பற்றிய எந்த விடயங்களும் வெளிவந்திருக்காது. ஏனெனில் எங்கள் தலைவர்கள் அவ்வாறான செய்திகளை கொண்டு செல்வதற்குத் தயாரானவர்கள் இல்லை. அவ்வாறான தலைவர்களும் எங்களிடம் இல்லை.
ஆகவே சனல் 4 போன்ற காட்சிப்படுத்தக் கூடிய அல்லது எங்கள் துயரங்களை வெளிப்படுத்தக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்களுடைய நிலைii வெளிப்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ச்சியாக அல்லது நிரந்தரமாக போராட்ட முனைப்பு முன்னெடுக்கப்படுதல் தவிர்க்க முடியாதது. நியமங்களைத் தொலைத்துவிட்டு இனத்தின் அடிப்படைகளை இழக்க முடியாதென்பதற்காக nஐனிவா அரங்கின் பக்க வாதங்களும் சரி மைய வாதங்களும் சரி ஏற்படுத்துகின்ற எல்லா விளைவுகளுக்கும் அப்பால் நேர்க்கணிதமான ஒரு சூழலை எல்லா மக்களிடததேயும் ஏற்படுத்தும் திரட்சியாகும். தேசியத்தினுடைய திரட்சியால் சாத்தியப்படுத்தினால் மட்டுமே மாறுதல் பற்றிய என்னம் உலகத்திலும் நாங்கள் சார்ந்து இருக்கும் நிலத்திலும் இருப்பை உத்தரவாதப்படுத்தி வைத்திருக்க முடியும்.
ஆதற்கான வாய்ப்புக்களைத் தவறவிடுதல் என்பது ஒட்டுமொத்தமாக இனத்தின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு சமமான முடிவை நோக்கியதாக இருக்குமென்று நினைக்கின்றென். தலைவர்கள் தவறவிடுகின்றார்கள் என்பதற்காக மக்கள் தவறான திசைகளில் தங்கள் பயணங்களைச் செய்ய முடியாது. இது புலமை சார்ந்த களத்தில் இருந்து இதற்கான அடிப்படையைi நாங்கள் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. இது வடகிழக்கில் இருக்கின்ற எல்ல மக்களுடைய தேசியம்.
இங்கு தேசியம் என்று உச்சரிக்கின்ற போது தேசியக் கூட்டமைப்பு, தேசிய முன்னணி, தேசிய அரங்கு என்றெல்லாம் வைத்திருக்கின்றொம். அது எல்லாம் சரியான முறையில் ஒழுங்குபடுத்த முடியாத தேசியமே பற்றி சிந்தனையில்லாத தேசியத்துக்கும் ஐனநாயகத்திற்கும் இடையில் இருக்கக் கூடிய உறவாடல் கூட இல்லாமல் வெறுமனெ போலித் தேசியம் பற்றி அதிகம் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கின்றொம். இவற்றில் ஒரு மாறுதல் எங்களுக்கு அவசியம் தேவை.
இனமாக மதமாக மொழியாக பிரதேசமாக இருக்கக் கூடிய எல்லாக் கட்டமைப்புக்களிலும் அடையாளங்களை முதன்மைப்படுத்த தவறுகின்ற பட்சத்தில் நாங்கள் வேறு வேறு விடயங்களாக எங்களை அடையாளப்படுத்த முயற்சிக்கின்றோம். சாதியமாக மத, பண்பாட்டு அடையாளங்களாக சித்தரிக்க முயற்சிக்கின்றொம்.
இவை எல்லாவற்றையும் கடந்து தமிழ்ச் சமூகமாக இருக்க வேண்டும். தமிழ் சமூகமாக கட்டுருவாக்கம் பெறுவது தான் இதன் அடுத்த நகர்வாக நாங்கள் பார்த்துக் கொள்ள மடியும். ஆத்தகைய நகர்வு சாத்தியப்படுத்திக் கொள்ளக் கூடிய அடிப்படையில் புலமை சார்ந்த தளத்தில் இருந்து உருவாக்கப்பட வேண்டும். நாங்கள் எப்படி எங்களைத் தகவமைத்தக் கொள்வது தான் எங்கள் இருப்பின் முக்கியத்துவத்தில் உள்ளது.
nஐனிவா அரங்கு போலியானதாக இருந்தாலும் அந்த அரங்கின் உண்மைத்தன்மைகளை அம்பலப்படுத்துதல் வெளிப்படுத்துவதற்கு நாங்கள் ஒன்றிணைய வேண்டும். நாங்கள் ஒரு கோட்டின் கீழ் எங்கள் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்த தவறினால் எங்கள் சமூகத்தின் இருப்பு காலாவதியான சூழலுக்குள் தள்ளப்படும் என்றார்.