கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் பிணையில் செல்ல அனுமதி! வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் கடற்படையினர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக ஊடகவி...
கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் பிணையில் செல்ல அனுமதி!
வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் கடற்படையினர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் முன்றலில் காணாமல் போனோரின் உறவுகளுடைய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் போராட்டத்தை படம் பிடித்ததுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் ஊடகவியலாளர்களையும் படம் பிடித்துள்ளார்.
இதை அவதானித்த ஊடகவியலாளர்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் தன்னைப்பற்றிய விபரங்களை தெரிவிக்க மறுத்த காரணத்தினால் அவரை பொலிசாரிடம் ஒப்படைக்க முற்பட்டுள்ளனர். அப்போது குறித்த நபர் தான் கடற்படை சிப்பாய் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த கடற்படை சிப்பாயை தாக்கியதாக தெரிவித்து கடற்படையால் ஊடகவியலாளர் தவசீலனுக்கு எதிராக கடற்படையினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தவசீலனை விசாரணை செய்த முல்லைத்தீவு பொலிசார் அவரை கைது செய்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி ரி.பரம்சோதி முன்னிலையில் இன்று முற்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிவான் ஒரு லட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவித்ததுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.