முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில், கடந்த 17ஆம் திகதி அன்று, 681 ஆவது படை தலைமையகத்துக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் மலச...

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில், கடந்த 17ஆம் திகதி அன்று, 681 ஆவது படை தலைமையகத்துக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் மலசல கூடம் அமைப்பதற்காக தோண்டியபோது,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இந் நிலையில் 21.05.2019 இன்றைய நாள், நீதிமன்ற அனுமதியுடன் குறித்த எலும்புக்கூட்டை தோண்டி எடுக்கும் நடவடிக்கை
இடம்பெற்று வருகின்றது. மேலும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் தடைய மீட்பு போலீசார் தோண்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.










