குருநாகல் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் ஆங்காங்கே முஸ்லிம் மக்களின் வீடுகள் மற்றும் வா்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்...
குருநாகல் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் ஆங்காங்கே முஸ்லிம் மக்களின் வீடுகள் மற்றும் வா்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருவதுடன், முஸ்லிம் மக்கள் மிகுந்த அச்சத்துடன் அங்கு தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஹெட்டிபொல கொட்டம்பட்டி பகுதியில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் இங்கு பள்ளிவாசல்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. ஹெட்டிபொல நகர் அதனை அண்மித்த பகுதிகளில் 5 ஜும்மா பள்ளிவாசல்கள் மற்றும் சில தக்கியாக்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் மடிகே அனுக்கல , நிக்கபிடி ,ஹெட்டிபொல ஜும்மா பள்ளிவாசல்கள் மீதும் கொட்டாம் பிட்டி பிரதேசத்தில் இரண்டு பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் , ஆட்டோ , லொறிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
மேலும் அப்பகுதியில் உள்ள சில தக்கியாக்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளிவாசலை அண்மித்த வீடுகள் மற்றும் பண்டார கொஸ்வத்த பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக இவ்வாறான நிலையில் வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு
வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.