சட்டத்திற்கு உட்பட்டவகையில் அதிகாரங்களை உச்ச அளவில் பயன்படுத்துமாறு இலங்கையில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளத...

சட்டத்திற்கு உட்பட்டவகையில் அதிகாரங்களை உச்ச அளவில் பயன்படுத்துமாறு இலங்கையில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
நேற்றய தினம் சிலாபம் பகுதியிலும் இன்று அதிகாலை தொடக்கம் குருநாகல் பகுதியிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர விடுத்துள்ள செய்தி குறிப்பில் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த சட்டத்திற்குட்பட்டு
அதிகாரங்களை உச்ச அளவில் பயன்படுத்துமாறு நாட்டில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


