“புதிய அரசமைப்பை உருவாக்கும் திட்டத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அடுத்த மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம்...
“புதிய அரசமைப்பை உருவாக்கும் திட்டத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அடுத்த மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
துரித கிராம அபிவிருத்தித்திட்ட நிதி மூலம் கரவெட்டி, இடைக்காடு, புதுத்தோட்டம் விநாயகர் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட வெளிமண்டபத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும். அந்தவகையில், ‘புதிய அரசமைப்புக்கு என்ன நடந்தது?’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதத்தைக் கோரியிருந்தோம். அதற்கமைய அடுத்த மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது.
புதிய அரசமைப்பு முயற்சி தொடரும். இந்த விடயத்தில் ஜனாதிபதி பின்னிற்கின்றார் என்பதற்காக அந்த முயற்சியை நாம் கைவிடப்போவதில்லை.
ஜனாதிபதி தலைகீழாக நின்றாலும் நாம் நேராக நின்று இதனைச் செய்து முடிப்போம்” – என்றார்.