36 தமிழர்கள் விபத்தில் இறந்தபோது அமைக்கப்படாத புகையிரத கடவைகள், 6 இராணுவம் இறந்ததும் அமைக்கப்படுகிறது: சிறிதரன் சுட்டிக்காட்டு!

36 தமிழர்கள் விபத்தில் இறந்தபோது அமைக்கப்படாத புகையிரத கடவைகள், 6 இராணுவம் இறந்ததும் அமைக்கப்படுகிறது: சிறிதரன் சுட்டிக்காட்டு!

2013 ஆம் ஆண்டு முதல் வடக்கில் இடம்பெற்ற புகையிரத விபத்துக்களில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ...

2013 ஆம் ஆண்டு முதல் வடக்கில் இடம்பெற்ற புகையிரத விபத்துக்களில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் புகையிரத ஊழியர்களின் போராட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2013 ஆம் ஆண்டு யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது. அதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால் 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் புகையிரத சேவைகள் இல்லாததன் காரணமாக வீதிகள் இல்லாது, தண்டவாளங்கள் இல்லாது புகையிரத பாதைகள் அழிவடைந்து, மக்கள் இந்த புகையிரத பாதைகள் ஊடாக தமது போக்குவரத்து பாதைகளை அமைத்து வாழ்ந்த சூழல், குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்றது.

இது தொடர்பாக பல தடவைகள் இந்த நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் இன்றுவரை எந்தப்பதில்களும் கிடைக்கவில்லை.

புகையிரத பாதைகள் அமைக்கப்படும்போது புகையிரத கடவைகள் 1968 ஆம் ஆண்டுக்கு முதல் வர்த்தமானியில் வந்த அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக்காலத்தின் பின்னர் கிராமங்கள் எழுச்சி பெற்றுள்ளன. மக்களின் வாழ்க்கை முறை மாறியுள்ளது. 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் யுத்தம் காரணமாக புகையிரத பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை மையமாக வைத்து புகையிரத பாதைகள் அமைக்கப்படும்போது இந்த கடவைகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு எந்தக்கடவைகளும் திட்டமிட்டு அமைக்கப்படவில்லை.

இந்தவிடயத்துக்கு பொறுப்பான அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா இருந்தபோது 2017-02-03 ஆம்திகதி விரிவான கடிதம் ஒன்றை அவருக்கு எழுதியிருந்தேன். அதில் நான் எங்கெங்கே கடவைகள் அமைக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். அதுவரையில் எத்தனைபேர் இறந்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

கடந்தவாரம் கூட நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் கிளிநொச்சியில் இராணுவ மருத்துவப்பிரிவின் வாகனம் புகையிரதத்துடன் மோதியதில் 6 இராணுவத்தினர் இறந்துள்ளனர்.

இதன் பின்னர்தான் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தலைமையில் கூட்டமொன்று நடத்தப்பட்டு புகையிரத கடவைகள் அமைப்பது தொடர்பாக பேசப்படுகின்றது.

இதுவரை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை 46 விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த புகையிரத பாதையில் இன்றுவரை பொதுமக்கள் 36 பேர்வரையில் புகையிரதத்துடன் மோதி இறந்துள்ளனர். இராணுவம் இறந்தால் மட்டும் உயிராகக் கருதக்கூடாது.

இந்த 36பேர் இறந்தபோது கவனத்தில் எடுக்கப்படாத விடயம் இப்போதாவது கவனத்தில் எடுக்கப்படுவதனை நான் முதலில் பாராட்டுகின்றேன். கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 16 புகையிரத கடவைகள் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பில் பல தடைவைகள் குறிப்பிட்டும் கருத்தில் எடுக்கப்படவில்லை.

அத்துடன் முன்னாள் போராளிகளிலிருந்து போரினால் கல்விகற்க முடியாத பலர் இந்த மாவட்டத்திலுள்ளனர். இவர்களை புகையிரத கடவை காப்பாளர்களாக நீங்கள் நியமிக்க முடியும். அவர்களுக்கு தொழிலும் கிடைக்கும். இதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றவும் முடியும். இது தவிர கிளாலியிலிருந்து காங்கேசன்துறை வரையில் 23 புகையிரத கடவைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. இதனைக்கருத்தில் எடுத்தால் இனி ஏற்படப்போகும் உயிரிழப்புக்களைத் தவிர்க்க முடியும் என்றார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,269,doctor,13,Gallery,131,india,431,Jaffna,3854,lanka,9419,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4618,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: 36 தமிழர்கள் விபத்தில் இறந்தபோது அமைக்கப்படாத புகையிரத கடவைகள், 6 இராணுவம் இறந்ததும் அமைக்கப்படுகிறது: சிறிதரன் சுட்டிக்காட்டு!
36 தமிழர்கள் விபத்தில் இறந்தபோது அமைக்கப்படாத புகையிரத கடவைகள், 6 இராணுவம் இறந்ததும் அமைக்கப்படுகிறது: சிறிதரன் சுட்டிக்காட்டு!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_TSU9BRK_B3Nww2ifmbS760gjE9N5uprDAH26w5R78MF5KEDRyEcj7c2TIhN6CpaWm2G3BPVjXNwhVWCzqg7TFlVAcGKfnW80NeJCkIRmeyKSw5jAvgOjC-fAQe3IbrhchE1BxAzt9cA/s640/gggg.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_TSU9BRK_B3Nww2ifmbS760gjE9N5uprDAH26w5R78MF5KEDRyEcj7c2TIhN6CpaWm2G3BPVjXNwhVWCzqg7TFlVAcGKfnW80NeJCkIRmeyKSw5jAvgOjC-fAQe3IbrhchE1BxAzt9cA/s72-c/gggg.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/06/36-6.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/06/36-6.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content