தமிழ் அரசு கட்சி நிர்வாகிகளாக பழையவர்களே தொடர்வார்கள்: பெயர்கள் எழுதி வைத்து வாசிக்கப்பட்டது; தெரிவு இடம்பெறவில்லையென குற்றச்சாட்டு

தமிழ் அரசு கட்சி நிர்வாகிகளாக பழையவர்களே தொடர்வார்கள்: பெயர்கள் எழுதி வைத்து வாசிக்கப்பட்டது; தெரிவு இடம்பெறவில்லையென குற்றச்சாட்டு

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச்செயற்குழு கூட்டம் சற்று முன்னர் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடந்து முடிந்தது. இம்முறை கட்சியின் முக்கி...

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச்செயற்குழு கூட்டம் சற்று முன்னர் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடந்து முடிந்தது. இம்முறை கட்சியின் முக்கிய பதவிகளில் பெரியளவிலான மாற்றங்கள் எதுவும் நடக்காமல், செயற்குழு கூட்டம் முடிந்தது. கடந்த முறை பதவியில் இருந்தவர்களே, அடுத்த பதவிக்காலத்திற்கும் பதவியில் இருப்பார்கள்.
கட்சியின் முக்கிய பதவிகளான தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளில் மாற்றம் நடக்கவில்லை.
தலைவராக மாவை.சேனாதிராசாவும், செயலாளராக கி.துரைராசசிங்கமும், பொருளாளராக கனகசபாபதியும் தொடர்வார்கள் என கட்சியால் அறிவிக்கப்பட்டது.
எனினும், இது ஜனநாயக முறைப்படியான தெரிவு அல்ல என்ற விமர்சனங்களும் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது. கட்சி வரலாற்றில் முதன்முறையாக- என்றும் இல்லாத புதுமையாக- நிர்வாகிகள் பெயரை மாவை சேனாதிராசாவே எழுதி வைத்து வாசித்தார்.
இதுவரை ஜனநாயக முறைப்படி பிரேரித்து, அதற்கு போட்டியாளரிருந்தால் அங்கீகரித்து, வாக்கெடுப்பு நடத்தியே, நிர்வாககிகள் தெரிவிருந்தது. எனினும், இம்முறை யாரும் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்பதை தமிழ்பக்கம் அறிந்தது.
செயலாளர் பதவிக்கு கி.துரைராசசிங்கத்தை நியமித்துள்ளதாக மாவை சேனாதிராசா அறிவிக்க, அதை மட்டக்களப்பு எம்.பி சீ.யோகேஸ்வரன் எதிர்த்தார். துரைராசசிங்கம் செயல்திறனான தலைவர் அல்ல, அவரது பதவிக்காலத்தில் கிழக்கில் கட்சி வீழ்ச்சியை சந்தித்தது, அவர் மட்டக்களப்பிற்கான செயலாளராக மட்டுமே இருக்கிறார், கிழக்கின் ஏனைய பகுதிகளை கவனிக்கிறார் இல்லை, உள்ளூராட்சி தேர்தலில் அவரது தொகுதியிலேயே கோட்டை விட்டார் என காரசாரமான குற்றச்சாட்டுக்கள் வைத்து, பொதுச்செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.பி, பா.அரயநேந்திரனின் பெயரை பிரேரித்தார். குலநாயகத்தின் பெயரும் போட்டிக்கு பிரேரிக்கப்பட்டது.
எனினும், இரா.சம்பந்தன் தலையிட்டு, மூவரிற்குமிடையிலான வாக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை, துரைராசசிங்கமே செயலாளராக தொடரட்டும் என்றார்.
அதிருப்தியாளர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட மாவை சேனாதிராசா, “துரைராசசிங்கம் தனது அணுகுமுறையையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொள்வார். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். 3 மாத அவகாசம் தாருங்கள். அவரது நடவடிக்கையில் தலைகீழ் மாற்றங்களை நீங்கள் அவதானிப்பீர்கள்“ என குறிப்பிட்டார்.
ஏனைய பதவிகளிலும் மாற்றங்கள் இருக்கவில்லை. இறந்த, விலகிச் சென்றவர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டன.
மூத்த துணைத்தலைவர்களாக இதுவரை இருவர் இருந்தனர். பொன் செல்வராசா, பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர். இதில் சிற்றம்பலம் கட்சியை விட்டு விலகி விட்டார். அவரது வெற்றிடத்திற்கு சீ.வீ.கே.சிவஞானம் தெரிவானார்.
கட்சியின் பிரதி பொதுச்செயலாளர்களாக இதுவரை எம்.ஏ.சுமந்திரன், சீ.வீ.கே.சிவஞானம் பதவிவகித்தனர். இம்முறை புதிதாக பா.சத்தியலிங்கம், சிவஞானத்தின் வெற்றிடத்திற்காக நியமிக்கப்பட்டார்.
கட்சியின் பிரதி செயலாளர்கள் ஐவர் பதவி வகிப்பது வழக்கம். இம்முறை அதில் புதிதாக இளைஞர் அணி செயலாளர் கி.சேயோன் தெரிவானார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,269,doctor,13,Gallery,131,india,431,Jaffna,3854,lanka,9419,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4618,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: தமிழ் அரசு கட்சி நிர்வாகிகளாக பழையவர்களே தொடர்வார்கள்: பெயர்கள் எழுதி வைத்து வாசிக்கப்பட்டது; தெரிவு இடம்பெறவில்லையென குற்றச்சாட்டு
தமிழ் அரசு கட்சி நிர்வாகிகளாக பழையவர்களே தொடர்வார்கள்: பெயர்கள் எழுதி வைத்து வாசிக்கப்பட்டது; தெரிவு இடம்பெறவில்லையென குற்றச்சாட்டு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9a_V2WseHNHcoQs1YLs3_Q6xqfx43X_ikmluRc9lpN1YbkFLtPOpXwmwrLg3znWvWER3SPTmFM2Wb3IpdwHhJo0Hl68f6llpwrvU2ndIVDZWSwanizjuitNr3fBO5QrEMXAICDPUt_b8/s640/tna.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9a_V2WseHNHcoQs1YLs3_Q6xqfx43X_ikmluRc9lpN1YbkFLtPOpXwmwrLg3znWvWER3SPTmFM2Wb3IpdwHhJo0Hl68f6llpwrvU2ndIVDZWSwanizjuitNr3fBO5QrEMXAICDPUt_b8/s72-c/tna.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/06/blog-post_252.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/06/blog-post_252.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content