அத்துரலிய ரத்ன தேரரின் கோரிக்கைகள் நியாயமானவை; புத்தர்கள் சிவபூமியை மதித்து நடக்கிறார்கள்: மறவன்புலவு சச்சிதானந்தம்!

அத்துரலிய ரத்ன தேரரின் கோரிக்கைகள் நியாயமானவை; புத்தர்கள் சிவபூமியை மதித்து நடக்கிறார்கள்: மறவன்புலவு சச்சிதானந்தம்!

அத்துரலிய ரத்தின தேரரின் கோரிக்கைகள் நியாயமானவை. அவரும் தொண்டர்களும் இலங்கை தேசியத்தை பாதுகாக்கவே விரும்புகிறார்கள். அவர்களது கோரிக்கையை இலங...

அத்துரலிய ரத்தின தேரரின் கோரிக்கைகள் நியாயமானவை. அவரும் தொண்டர்களும் இலங்கை தேசியத்தை பாதுகாக்கவே விரும்புகிறார்கள். அவர்களது கோரிக்கையை இலங்கை அரசு உடனடியாக நிறைவேற்றினால், சைவத்தமிழர்கள் இலங்கை அரசை பாராட்டுவார்கள் என அறிக்கை விட்டு, மீண்டும் கலகலப்பை மூட்டியிருக்கிறார் சிவசேனையின் மறவன்புலவு க.சச்சிதானந்தன்.

அவரது அறிக்கையில்,

இலங்கை சிவபூமி. திருமூலர் அன்றே கூறினார். புத்தர்கள் சிவபூமியை மதித்து நடக்கிறார்கள். புத்த விகாரைகளில் சிவனுக்கும் இடமுண்டு சைவக் கடவுளருக்கும் இடம் உண்டு.

400 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைகுள் வலிந்து புகுந்த கிருத்தவ மதம் சைவர்களையும் புத்தர்களையும் ஏளனம் செய்தது சைவக் கோயில்களும் புத்த விகாரங்களும் சாத்தானின் இருப்பிடங்கள் என வலிந்து கூறினர். பீரங்கி முனையில், துப்பாக்கி முனையில், வாள் முனையில் சைவர்களையும் புத்தர்களையும் கிறித்தவர்கள் ஆக்கினர்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரோடு புகுந்த முகமதியர்கள் தொடக்கத்தில் இந்த மண்ணின் மரபுகளை மதித்து உள் புகுந்தனர். படிப்படியாக மண்ணின் மரபுகளை இழித்துப் பேச தொடங்கினர் அண்மைக்காலங்களில் மிதித்து நடக்க முற்படுகின்றனர்.

சிவ பூமியில் இருந்த காளி கோயிலை அகற்றினேன், அந்த இடத்தில் முகமதியர் வழிபாட்டிடம் கட்டினேன், மசூதி கட்டினேன், அதற்காக அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தினேன் என்ற பொருள்பட இன்றைய கிழக்கு மாகாண ஆளுநர் இசுபுல்லர் கூறிய சொற்கள் அவர் இலங்கை அரசில் எந்தப் பதவியையும் வகிக்கத் தகுதியற்றவர் என்பதையே எடுத்துக் காட்டின.

முசலிப் பிரிவில் சிவபூமிக்குள்ளே அடாத்தாகக் காடுகளை வெட்டி ஆயிரத்துக்கும் அதிகமான முகமதியரைக் குடியேற்றியவர் இரிசாத்தர் பதியுதீன்.

முல்லைத்தீவில் சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவைக் கையகப்படுத்தி அங்கு முகமதியரைக் குடியேற்ற இரிசாத்தர் பதியுதீன் முனைந்த பொழுது வடமாகாண சபை தலையிட்டுத் தடுத்தது.

சிவபூமியில் மாட்டிறைச்சிக்கடை கூடாது எனச் சைவர்கள் களம் இறங்கிய பொழுது உள்ளுராட்சி அமைப்புக்கள் தீர்மானங்கள் இயற்றிய பொழுது உள்ளூராட்சித் தலைவர்களை மிரட்டியவர் இரிசாத்தர் பதியுதீன்.

இசுபுல்லரும் இரிசாத்தர் பதியுதீனும் அரசுப் பதவிகளில் இருப்பதால் சைவர்களுக்கு வேண்டாததைச் செய்கிறார்கள் என்ற முறைப்பாடு வடக்கே கிழக்கே மலையகத்திலே நெடுங் காலமாக உண்டு.

கிழக்கு மாகாணச் சைவத் தமிழர்கள் ஒன்றிணைந்து இசுபுல்லர் பதவி விலக வேண்டும் என ஒரு நாள் முழுவதும் கடையடைப்பு நிகழ்த்தியதை மறக்க முடியாது.

கண்டியில் தலதா மாளிகையில் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் காலவரையற்ற உண்ணா நோன்பு இருக்கிறார். சைவத் தமிழர்களாகிய நாங்கள் எதை இந்நாள்வரை கோரிக்கையாக வைத்திருந்தோமோ அதையே புத்தத் தேசியவாதியான வணக்கத்துக்குரிய தேரரும் வைத்திருக்கிறார் களத்தில் இறங்கி போராடுகிறார்.

வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தன தேரர் பெருமானின் கோரிக்கைகளில் நியாயம் உண்டு. நீதி உண்டு. இலங்கை அரசு செவி சாய்க்க வேண்டும். அவரது கோரிக்கைகளை நிறைவேற்றி இலங்கைத்தீவின் மண்ணின் மரபுகள் பேணுவோரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

வணக்கத்துக்குரிய தேரின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகளை எடுத்தால் இலங்கையைச் சிவபூமியாக கொண்டு வாழ்கின்ற சைவத் தமிழர்கள் இலங்கை அரசைப் பாராட்டுவார்கள்.

வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் அவர்களும் அவரது அருமைத் தொண்டர்களும் புத்த தேசியத்தை முன்னெடுத்து மண்ணின் மரபைப் பேண விழைகிறார்கள்.

இந்த வரலாற்று முயற்சியில் பத்த சிங்கள மக்களுக்கு உறுதுணையாக இந்த மண்ணின் மரபுகளைப் பாதுகாத்துப் பேணிக் காக்க விரும்புகின்ற சைவத் தமிழர்கள் இருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,268,doctor,13,Gallery,131,india,430,Jaffna,3852,lanka,9412,medical,7,Medicial,39,sports,413,swiss,15,technology,84,Trending,4616,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: அத்துரலிய ரத்ன தேரரின் கோரிக்கைகள் நியாயமானவை; புத்தர்கள் சிவபூமியை மதித்து நடக்கிறார்கள்: மறவன்புலவு சச்சிதானந்தம்!
அத்துரலிய ரத்ன தேரரின் கோரிக்கைகள் நியாயமானவை; புத்தர்கள் சிவபூமியை மதித்து நடக்கிறார்கள்: மறவன்புலவு சச்சிதானந்தம்!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6Glmb74bxLLgKPZtX1hDtxT70kObH19IOz0M7nVKCnastHTseThKnwZsIEjUNod_do2Q8nNnuMPq66QEfAeLK-WUPB9a9Fre0qVH9a43s0HIdgk5UbrR7eAKuS08S31s11ItAd2A_2A4/s640/%25E0%25AE%25AE%25E0%25AE%25B1%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AE%25B5%25E0%25AF%2581-%25E0%25AE%259A%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D-696x466.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6Glmb74bxLLgKPZtX1hDtxT70kObH19IOz0M7nVKCnastHTseThKnwZsIEjUNod_do2Q8nNnuMPq66QEfAeLK-WUPB9a9Fre0qVH9a43s0HIdgk5UbrR7eAKuS08S31s11ItAd2A_2A4/s72-c/%25E0%25AE%25AE%25E0%25AE%25B1%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AE%25B5%25E0%25AF%2581-%25E0%25AE%259A%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D-696x466.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/06/blog-post_41.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/06/blog-post_41.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content